பக்கம்:பூங்கொடி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏடு பெற்ற காதை

இன்னும் உளவோ ஏடுகள் என்னவும் அன்னப்! எடுபல் லாயிரம் இருந்தன, வெந்நீர் வேண்டி விறகென அவற்றை எரித்தோம் என்றனன்; துடித்ததென் மனனே, 90 எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! i

கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ! கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே! வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும் கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்; 95 என்னே! என்னே இவர்தம் மதிதான்!

மடமை என்கோ? கொடுமை என்கோ? படம்விரி யாவுக்குப் பசுப்பால் வார்த்தோம்! உடனுறை வாழ்வும் உவந்ததற் களித்தோம்!

மனத்துயரம்

அச்சகம் தொழிலோன் அவன்மனே யாட்டி 100 மகப்பெறு லெயில் மிகப்பெருங் துயரால்

வருங்குதல் கேட்டு விரைந்தவன் தொழிலைத் நிருந்த முடித்து வரும்பொருள் பெற்று விடு செல்ல விழைந்தவன் எடுக்கக் கூடும் எழுத்துக் குலைந்து சிதறி 105 விழ்ந்திடக் கண்டு வெதும்புதல் போல

என்மனம் கலங்கி ஏடுகள் பார்த்தேன்;

இருபெருஞ் சுவடிகள்

கூத்தும் இசையும் கூறும் இருநூல்

ஏத்தும் படியாய் என்விழிப் பட்டன;

வாழ்த்துக் கூறி மகிழ்ந்தவை புரட்டினேன்; 110 நெருப்பாற் புண்படு நெஞ்சம் வேதுபெற்

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/82&oldid=665829" இலிருந்து மீள்விக்கப்பட்டது