பக்கம்:பூங்கொடி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

40

45

50

55

60

நல்லஇச் செயலால் நம்மனேர் அறிவொளி எய்திடப் பெறுவர் ; எய்திய காலை உய்வகை அறிவர் ; உணர்வும் பெறுவர் ; எப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் காண்பர் ; தப்பெதும் புரியார் ; தாய்மொழி அன்பும் இயல்பினில் வாய்க்கும் ; இந்தநல் லன்பால் மயலறி வொழித்து மாண்புகழ் ஆக்குவர் ; பிறமொழி தமிழிற் பெருகுதல் காணின் அறவே ஒதுக்குதற் காவன இயற்றுவர் ;

மொழிக் கலப்பு

செம்பொன் றன்ைேடு செம்பு கலந்தால் அம்பொன் அணிகள் அமைத்திடல் ஒல்லும் ; கலவா விடினேர் கலன்செய இயலா கதுபோற் பிறமொழி அகற்றுதல் கருதின் தமிழ்வள ராகெனச் சாற்றுவர் சிலர்தாம் ; அமிழ்தம் இனிக்க அச்சு வெல்லம் கலப்போர் உலகிற் கண்டோ மில்லை ; உலப்பிலாத் தமிழ்மொழி உயர்கனிச் செம்மொழி கலப்பிலா தியங்கும், கற்றவர் அறிவர் ; செம்பு கலக்கணி செய்வதும் இயற்கை, செம்பும் மிகவே சேர்த்திடப் பெறுமேல் கலன்செய அப்பொன் பலன்படா தொழியும் ;

இசையுங் கூத்தும் பரப்புக எனல்

நலமிகு நல்லாய் ! நற்றமிழ் வளரப்

புலம்புலஞ் சென்று புரிகநற் றிருப்பணி ; மங்கை கேளினி மற்றாென் றறைகுவென் துய்ப்போர்ப் பிணிக்கும் தொன்மைசேர் இசைநூல்,

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/87&oldid=665834" இலிருந்து மீள்விக்கப்பட்டது