பக்கம்:பூங்கொடி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

70

75

80

85

மலையுறையடிகள் வாழ்த்திய காதை

மெய்ப்பா டனைத்தும் மேவிய கூத்துதுரல் எத்துணை எத்துணை இருந்தன. தமிழில் அத்துணை நூலும் அழிக்கன கடலால் எனகாம் இரங்கி அயருங் காலத், கனவெனக் கட்டுக் கதையெனக் கழறியும் புலவோர் தம்மைப் பொல்லாங் குரைத்தும் அலறுவோர் சிலருளர் அருகிய அறிவினர் அவருரை பொப்யென ஆக்குக நங்காய் ! சுவடியின் துணையாற் சொல்லுக மெய்ம்மை ;

தமிழினமும் குரங்கினமும்

தமிழிற் பற்றுதல் தவறுவோர் தம்மையும் தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம் ; தாய்க்குரங் கொருகிளே தாவுங் காலரி தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் குரக்கினம் தம்மொடு கொள்ளா கொழிக்கும் , மரக்கிளை வாழும் மந்தியின் மானம் நமக்கிலே அங்கோ நாமோ மாந்தர் ! மானம் பரவுதற் கானவை இயற்றுக ;

தாய்மையும் பொதுப் பணியும்

பிணியுறு குழவியின் பெருந்துயர் கண்டு, தணிவறு காதல் தாய்மனம் உருகிப் பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய, அறியாக் குழவி அலறுதல் போல, அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப் பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் சிறியோர் மருளுவர் சீறுவர் ; அவர்கமைப் பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றிக்

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/88&oldid=665835" இலிருந்து மீள்விக்கப்பட்டது