பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

 உடல் வலிமையையும், நெஞ்சுரத்தையும் (Stamina) சோதிக்கின்ற ஆட்டம்தான் இந்த ஒற்றையர் ஆட்டம் என்பதை எல்லோருமே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய ஆற்றல் மிக்க ஆட்டத்தை ஒரு ஆட்டக்காரர் எவ்வாறு ஆடவேண்டும் என்பதை இனி வரும் பகுதியில் காண்போம்.

1. ஒற்றையர் ஆட்ட போட்டியானது இரண்டு எதிராளிகளுக்கிடையே நடக்கும் துவந்த யுத்தம் போன்று இருப்பதால், ஒருவருக்குள்ள குறைபாட்டை (Weakness) உணர்ந்துகொண்டு, அதற்கேற்பவே ஆடி எதிராளியை வெற்றிகொள்ள வேண்டும்.

2. அதற்கடுத்து, சர்விஸ் போடும்போது, ஒரு சில யுக்திகளைக்கையாள வேண்டும். பல்வேறுவிதமான சர்விஸ் முறையினை இந்த ஒற்றையர் ஆட்டத்தில் சர்விஸ் போடும்போது பின்பற்றலாம்.

வலையோரமாகச் செல்வது போன்ற . சர்விஸ் (Low Service): அவ்வாறு போடுகின்ற பந்தானது தவறு என்று குறித்துள்ள முன்னெல்லைக் கோட்டை (Fault Area) ஒட்டினாற்போல் போய் விழுமாறு செய்தால், அது மிகவும் சிறப்பான சர்விசாகும்.

8. பந்தை உயரமாகத் தூக்கி விட்டாற்போலு சர்விஸ் (Lob) போட்டால், அதை கடைக்கோட்டருகில் போகுமாறு போடவேண்டும். அப்பொழுது எதிராட்டக்காரர் பின்னல் ஒடிப்போய் பந்தை தடுமாறிக்கொண்டு எடுத்துப் போடும்போது, அடித் தாட வாய்ப்பாகவும் வசதியாகவும் வந்து அமையும்: :அனுகூலமான ஆடும் முறையையும் அளிக்கும்.