பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

 குழுவில் யாரும் இல்லை என்பதால், தனக்கு செளகரிய மாக நடு ஆடுகளத்திலே வருகின்றபந்தை தாராளமாக அடித்தாடலாம் (Smash). வெட்டி ஆடி அனுப்பலாம் (Cut). ஆனால், வசதியாக வந்தால்தான் அடிக்க வேண்டும்.

2. நடு ஆடுகளத்தைக் கடந்து பின்புறம்: போகின்ற பந்தை எப்பொழுதும் அடித்தாட முயலக் கூடாது. அவ்வாறு ஆடினால், அது நடு ஆடுகளத்திற்குத்தான் செல்லும். அப்படியென்றால் அதை விரைவாக எடுத்தாடி, நீங்கள் வருவதற்குள் உங்கள் முன் புறத்தில் இடம் போட்டு விடுவார்கள். பிறகு உங்களால் அதை எடுத்தாட முடியாமல் சிரமப்பட நேரிடும். ஆகவே, அது போன்ற இக்கட்டான நிலைமையை நீங்களே உண்டுபண்ணிக் கொள்ளாமல் ஆட வேண்டும்.

3. வருகிற பந்தை வேகமாக அடிக்காவிட்டாலும் இடம் பார்த்து நேராகத் தள்ளுவதுபோல(Push Stroke) . அடித்தாடினால், அது நல்ல பயனைக் கொடுக்கும். அவ்வாறு ஆடும்போது சரியான இடத்தைக் குறி பார்த்து: அங்கே போய் விழுவது போல சாமர்த்தியமாக ஆடிட வேண்டும். இந்த ஆட்ட முறையை எந்த இடத்தில் இருந்து வேண்டுமென்றாலும் ஆடலாம்.


4. மெதுவாகக் காற்றடித்துக்கொண்டிருக்கும். பொழுது, பந்தைச் சுழற்றி அடித்து (Twist) ஆடினால், அது காற்றேடு போய் சேர்ந்து, எதிராட்டக்காரரை. ஏமாற்றி விழும். அதனால், நேரம் பார்த்து, இந்த ஆட்டத் திறனைக் கையாண்டு கொள்ளலாம்.