பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

 பிரகாசமாகவே இருக்கும். இது மிகையான ,மொழியல்ல, உண்மை தான்.

ஒற்றையர் ஆட்டத்தில் வருகிற பந்தை வலிமையாக அடித்து அனுப்பாமல், எடுத்தாடியே அனுப்பிக் கொண்டிருக்கும் ஆட்டம் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அந்த ஆட்டம் தான் அருமையான வெற்றியைத் தரும் வரப்பிரசாதமாக, அமைந்திருக்கும் என்பதை ஆடியுள்ள அனுபவசாலிகள் அனைவரும் அறிவார்கள்.

ஏனெனில், அவர் ஆடுகின்ற ஆட்டம் பத்திரமானதாகும். பாதுகாப்பான ஆட்டமாகும். பதட்டப் படாமல், நிதானமாக, அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலம் போல இல்லாமல், தேவையற்ற துணிச்சல் இல்லாமல், பொறுமையாக பந்தை ஆடி அனுப்புவதால் தான், அவரது வெற்றி வாய்ப்பு பளிச்சென இருக்கிறது என்கிறார்கள் ஆட்டவல்லுநர்கள்.

அவர் பந்தை எடுத்து அனுப்பிக் கொண்டிருப்பதானது, எதிராளியை அடிக்கத் தூண்டி விட்டிவிடுகிறது. அதன் காரணமாக, அவர் ஆவேசத்துடன், ஆசைப் பெருக்குடன் அடித்தாடத் தலைப்பட்டு விடுகிறார். இது எடுத்தாடுபவருக்கு சாதகமான சந்தர்ப்பமாகும். அடித்தாடுபவர் இழைக்கின்ற தவறுகள் அனைத்தும், இவருக்கு வெற்றிக்குத் தானே வழி வகுக்கும்.

படபடப்புடன் எதிராட்டக்காரர் பாய்ந்து பாய்ந்து அடித்தாடிக் கொண்டிருக்கும் போது, இவர் தனது பணியை அமைதியாகச் செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அமைதியாக ஆடும் எடுத்தாடும் ஆட்டக்

பூப்-7