பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

 அவ்வாறு முன்பகுதியில் போடுகின்ற பங்தைத் தடுக்கலாம் (Shut). அலல்து தடுத்துப் போடலாம் (Block), அது முடியவில்லை என்றால், கடைக் கோட்டுப் பகுதிக்கே அனுப்பினாலும் தவறில்லை.

5. எப்பொழுதும், ஏதாவது ஒரு பக்கக் கோட்டின் பகுதி பக்கமாகவே பந்தை அனுப்பிக் கொண்டிருந்து விட்டு திடீரென்று எதிர்ப்புறமுள்ள அடுத்த பகுதிக்குக் குறுக்கே அனுப்பி வைத்து விடவேண்டும். இது மிகவும் சாதகமான ஆட்டமாகும்.

ஏனெனில், அடித்தாடும் ஆட்டக்காரரை அந்தப் பககம் இந்தப்பக்கம் என்று ஒடவிட்டு விட்டால், அவர் விரைவில் அசந்து போய் களைத்து விடுவதால், அவர் அடிக்கின்ற பந்தாயினும் சரி, எடுத்தாடும் பந்தாயினும் சரி, நேராக வருவதில்லை. அவ்வாறு வந்தாலும், தடுத்தாடும் ஆட்டக்காரர் எளிதாக ஆடும் வண்ணமாகவே வந்து சேரும்.

ஆகவே, எடுத்தாடும் ஆட்டக்காரர். இவ்வாறு நிதானமாக ஆடினால், ஆட்டம் முடிய இருக்கின்ற கடைசி நிமிடம் வரை அவர் சுறுசுறுப்பாகத் தோற்றமளிப்பார். அத்துடன் களைப்பில்லாமல் களிப்புடன் விளையாடவும் செய்வார்.

எதிராளியை விரைவில் களைக்கச் செய்து தான் களைக்காமல் இருந்து ஆடுகின்ற எடுத்தாடும் ஆட்டம், மிகவும் சிறப்பான ஆட்ட முறையாகும்.