பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூப்பந்தாட்டத்தின் முக்கிய விதிகள்



1. ஆட்டக்காரர்களும் வெற்றி எண்களும் (Players & Points)

ஒரு குழுவிற்கு 5 ஆட்டக்காரர்கள் உண்டு. ஒவ்வொரு ஆட்டக்காரரும் அவரவருக்குரிய பந்தாடும் மட்டையுடன் (Bat) ஆடவேண்டும்.

ஒரு முறை ஆட்டத்தில் (Game) வெற்றி பெற ஒரு குழு 29 வெற்றி எண்கள் எடுத்தாக வேண்டும்.

2. பந்து (Ball)

பூப்பந்தாட்டத்தில் பயன்படும் பந்தின் எடையானது 1⅛ தோலாவுக்குக் குறையாமலும், 1¼ தோலா வுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். பந்தின் விட்டமானது 2 அங்குலத்திற்குக் குறையாமலும், 2⅛ அங்குலத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

குறிப்பு: பொதுவாக, 14 தோலா எடையுள்ள பந்தே சிறந்ததென ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது

3. ஆடுகளம் (Court) பூப்பந்தாட்ட ஆடுகளத்தின் அளவானது-நீளம் 80 அடி, அகலம் 40 அடி. ஆடுகளமானது, நடு ஆடுகளத்-