பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

பெயரையும், பொறுப்பான செயலையும் மேற்கொள்கின்ற புகழ்மிக்கப் பதவியை வகித்து நடத்தும் நடுவருக்குத் தேவையான குணாதிசயங்களையும், கொள்ளவேண்டிய விதிமுறைக் குறிப்புக்களையும், கீழே விவரித்துச் செல்கின்றோம்.

நடுவராகப் பணியாற்றுவோர் நயமாக இதனைப் பின்பற்றி ஒழுகுவாரானல், நல்ல நடுவர் என்று பிறா, புகழக் கேட்டுப் பேரின்பம் எய்துவதுடன் தொல்லையான பெரும் பணியைத் துய்மையாக திறமையுடன் நிறைவேற்றி விட்டோம் என்ற மன அமைதியையும் மனோகரமான மகிழ்வினையும் பெற்றிடலாம்.

1. நடுவரின் மனநிலை.

போட்டிக்குச் செல்வதற்கு முன்னர் பூப்பந்தாட்டத்திற்கான விதிகள் அனைத்தையும் ஐயம் திரிபறத் தெரிந்து கொண்டு தான் செல்ல வேண்டும். அரை குறை அறிவானது அரைக்கிணறு தாண்டுவது போலாகும்.

விதிகள் முழுவதும் தெரியாதது தவறல்ல. மன்னிப்புக்கு அப்பாற்பட்ட குற்றமுமல்ல. தெரிந்தவர்களை அணுகி, சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்கின்ற நெஞ்சம் வேண்டும்.

அதே சமயத்தில், ஒன்றுமே தெரியாதவர் என்ற நிலையில் வந்து அரைகுறை அறிவுடன் செயல்பட்டால், அவமானம் நிகழ்ந்துவிடுவது சர்வசாதாரணமாகி விடும்.

இரண்டு குழுக்களுக்கும் நீதி சொல்லத்தான் நடுவராக வந்திருக்கிறோமே தவிர, ஒரு குழுவிற்கு மட்டும்