பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

 ஆட்டம் தொடங்குவதற்குமுன்னர், அவர்களுடன் பேசி, கலந்துரையாடி, அவர்கள் தன்னுடைய பணிக்கு எவ்வாறு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்து, சைகை முறைகளையும் காட்டி ஏற்பாடு செய்த பின்னர், அவர்கள் உட்கார வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டி அமர்த்திட வேண்டும்.

கோடுகளின் மேல் பந்து பட்டால், அது ஆடுகளத்திற்கு வெளியே விழுந்தது (out) என்கிற விதியை மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு நினைவு படுத்திவிட்டு, ஆடுகளத்திற்குள் பந்து விழுந்தது என்றால் ஆட்காட்டி விரலை தலைக்கு மேலே உயர்த்திக் காட்டு; வெளியே போய் விழுந்தது என்றால் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் விரித்துக் காட்டு' என்னும் சைகை நிலையையும் விளக்கிக் கூறிவிட வேண்டும்.

5. ஆர்வத்தின் காரணமாக, பார்வையாளர்கள் ஆடுகள எல்லைக் கோடுகளுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களை 5 அடி தூரத்திற்கு அப்பால் சென்று அமர்த்துமாறு விழாக் குழுவினரிடம் கூறி வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

6. பின்னர், இரு குழுக்களின் தலைவர்களையும் அழைத்து, நாணயம் சுண்டி எறிதலில் பங்கு பெறச் செய்து, நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகின்றவர்களின் தெரிவு (Choice) என்ன என்பதையும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.


7. ஆட்டத்தில் இடப்படுகின்ற பந்தின் கனம், சுற்றளவு இவற்றை ஆராய்ந்து பார்த்து, தான்