பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

 தங்களது இடங்களில் நிற்கின்றார்களா என்பதை முதலில் கண்டுணர்ந்து கொள்ள வேண்டும்.

2. ஒரு குழுவிற்கு 5 ஆட்டக்காரர்கள் இருந்து ஆடவேண்டும் என்பதுதான் விதி. ஆனால் ஆட்டத் தொடக்கத்தில், ஒரு குழுவில் 5 ஆட்டக்காரர்கள் இல்லாமல், குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் பொழுது, அக்குழுவினரை ஆட அனுமதிக்கலாம்.

ஆனால், இருக்கின்ற ஆட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல்தான், அவர்களுக்கு பந்தடித்து வழங்கும் (சர்விஸ்) வாய்ப்பினைத் தர வேண்டும். உதாரணமாக, 4 ஆட்டக்காரர்கள் இருந்தால் 4 முறை சர்விஸ் போடும் வாய்ப்புதான் உண்டு. 5 பேர்களுக்குரிய வாய்ப்பாக 5 முறை வாய்ப்பு வேண்டுமென்று கேட்டால், அவ்வாறு அனுமதிக்கக்கூடாது. அப்பொழுது ஆடுகளத்தில் நின்றாடும், இருக்கின்ற ஆட்டக்காரர்களுக்கு உரிய வாய்ப்பே கிடைக்கும்.

3. ஆட்டம் தொடங்குகின்ற குறித்த நேரத்திற்கு வர இயலாமற் போய், நேரங்கழித்துத் தாமதமாக வருகின்ற ஆட்டக்காரர்கள், ஆடுகளத்தில் இறங்கி ஆட ஆனுமதிக்கப்படுவார்கள். என்றாலும், தாமதித்துவரும் ஆட்டக்காரர்கள் நடுவரிடம் கூறி, அனுமதி பெற்ற பிறகே, ஆடுகளத்திற்குள் நுழைய வேண்டும்.

4. ஆட்டத்தைத் தொடங்கும் போதுதான்' ஆட்டத்தில் இடுவதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பந்தைத் தர வேண்டும். அதற்குப் பிறகே, ஆடிப் பார்க்க அனுமதிக்க வேண்டும்.

-