பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

 5. ஒரு சில நடுவர்கள், ஓரிருமுறை 'மாதிரிப் பந்தாட்டம்' (Trial Ball) ஆட அனுமதித்துவிட்டு, ஆட்டத்தைத் தொடங்கிவிடுவார்கள். அந்தந்த நேரத்திற்கேற்ப இதுபோல் அனுசரித்து நடந்துகொள்ளலாம்.

6. வெற்றி எண் குறிப்பாளரிடம் (Scorer) கூறி விட்டு, கோடு காப்பாளர்களிடமும் கூறித் தயார்ப் படுத்திவிட்டு, இரு குழுத் தலைவர்களிடமும் அறிவித்து விட்டு,எந்தக் குழுவினருக்கு முதலில் பந்தடித்தெறியும் வாய்ப்பு (சர்வீஸ்) உண்டோ, அவர்களிடம் பந்தைத் தரவேண்டும்.

4. பந்தடித்தெறியும் (Service) விதிமுறை :

இனி (சர்விஸ்) பந்தடித்தெறிதலை எவ்வாறு கண்காணிப்பது என்கிற முறைகளைக் காண்போம்.

1. ஒரு 'முறை ஆட்டம்' (Game) தொடங்குகிற் பொழுது பந்தடித்தெறியும் வாய்ப்பினை முதன் முதலாகப் பெறுகிற குழுவிற்கு ஐவர் ஆட்டம் (Fives) என்றால் மூவருக்குத் தான் வாய்ப்பு உண்டு.

இரட்டையர் ஆட்டம் (Doubles என்றால், ஒருவருக்குத்தான் சர்விஸ் போடும் வாய்ப்பு உண்டு.

2. இடுப்பிற்கு மேலே பந்தை உயர்த்திப் போட்டு அடித்து சர்விஸ் போடுவது தவறான சர்விசாகும். இது மிகவும் முக்கியமான விதியாகும்.

குறிப்பு : சர்விஸில், மிகவும் தந்திரத்தை கையாளுபவர்கள் அதிகம். பந்தை இடுப்பளவுக்குக் கீழே முதலில் இருப்பதுபோல் பாவனை செய்துவிட்டு, .திடீரெனப் பந்தை உயர்த்திப் போட்டு அடித்துவிட்டு