பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

இவ்வாறு செயல்படுவதால், நடுவரின் பணி சிறப் படைகிறது.

4. சர்விஸ் போடுகின்ற ஆட்டக்காரர், ஆடுகளத்தினுள்ளே நின்றுகொண்டு தான் போடுகின்றாரா என்பதையும் நன்கு கவனிக்க வேண்டும்.

ஆடுகளத்தின் உள்ளே என்றால், அவரது உடலின் ஏதாவது ஒரு பகுதியோ அல்லது பந்தாடும் மட்டையோ ஆடுகளக்கோட்டை (எல்லைக்கோடுகள்) மிதிக்காமல் அல்லது எல்லைக்கு வெளியே செல்லாமல் இருத்தலாகும்.

ஆடுகளக்கோட்டை ஒருவர் மிதித்துக் கொண்டு சர்விஸ்போட்டால், அவர் வெளியேயிருந்து போடுகிறார் எனபது அர்த்தம். பந்தாடும் மட்டையையும் நேரத்தின் போது, கோட்டிற்கு வெளியே கொண்டு போகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

5. நின்ற இடத்திலிருந்து தான் சர்விஸ் போடவேண்டும். நடந்துகொண்டோ அல்லது நகர்ந்து கொண்டோ (Motion) சர்விஸ் போடுவது தவறாகும் (Fault).

6. எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் ஆடத் தயாராக இருக்கும்பொழுது தான், ஒருவர் சர்விஸ் போட வேண்டும்.

ஒரு சில ஆட்டக்காரர்கள், தங்களுக்கு சர்விஸ் போடும் வாய்ப்புக் கிடைத்தவுடன், எதிர்க்குழுவினர் தயாராக இல்லாதபோது; அல்லது மறுபகுதிக்குக் (other Hall) கலந்து போகும்போது; அல்லது