பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

திலே உள்ள வலைக்கோடு (Net Line) ஒன்றினால் பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஆடுகளத்தின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் 3 அடி தூரத்திற்கு மிகாமல் வெளியே பதிக்கப்பட்டிருக்கும் இரண்டு கம்பங்களின் உச்சியில், இரு மூலைகளிலும் இழுத்துக் கட்டப்பட்டிருக்கின்ற வலையானது. அந்த வலைக் கோட்டுக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு பகுதியின் (Court) முடிவிலும், வலைக் கோட்டுக்கு இணையாக இருபுறமும் 40 அடி தூரத்தில் குறிக்கப்பட்டிருக்கின்ற கோட்டுக்கு எல்லைக் கோடுகள் (Boundary Lines) என்று பெயர். எல்லைக் கோடுகளின் மூலைகள், பக்கக் கோடுகளுடன் இணைக்கப்பட்டு, முழு ஆடுகளமாக மாறிவிடுகிறது.

வலைக்கோட்டுக்கு இணையாக இருபுறமும் 3 அடி நீளத்தில் ஒவ்வொரு பகுதியிலும் குறிக்கப்பட்டிருக்கின்ற கோட்டுக்கு அடித்தெறியும் அடையாள எல்லைகள் (Serving Crease Lines) என்று பெயர்.

அடித்தெறியும் அடையாள எல்லைக் கோட்டின் சரிபாதியில், பக்கக் கோட்டிற்கு இணையாகக் குறிக்கப்பட்டிருக்கும் கோட்டுக்கு நடுக்கோடு (Centre Line) என்று பெயர். இந்த நடுக்கோடானது அடித்தெறியும் அடையாள எல்லைகளை இரண்டு சரிபாதியாகக் கூறுபடுத்தி, ஆடுகளத்தை வலப்பகுதி, இடப்பகுதி (Right Court and Left Court) எனப் பிரித்துக் காட்டுகிறது.

ஆடுகளத்தின் மத்தியில், தொங்கிக் கொண்டிருக்கும் வலையினுடைய உச்சியின் உயரம் நடுவில் 6 அடி-