பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

யார் சர்வீஸ் போடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டே வரவேண்டும்.

2. சர்விஸ் போடுபவர் எத்தனையாவது ஆட்டக்காரர் (Hand) என்பதையும் கணக்கிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

3. ஒவ்வொரு 'வெற்றி எண்' பெற்ற பிறகும், சர்விஸ் போடும் குழுவினர், அவர்களது ஆடுகளப் பகுதியில் சரியாக மாற்றிக் கொள்கிறர்களா (Change of Courts), சர்வீஸ் சரியான வாய்ப்புப்படியே நடக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவேண்டும்

ஈ. சர்விசைத் தொடங்குபவர், முதலில் தாங்கள் நிற்கும் வலப்புற ஆடுகளப் பகுதியில் (Right Court) இருந்துதான் தொடங்க வேண்டும். அவ்வாறு அவர் தொடங்குகிறாரா என்பதை நடுவர் கவனிக்கவேண்டும்.

அவ்வாறு தவறான பகுதியில் இருந்து யாராவது சர்விஸ் போட்டால், தவறினைச் சுட்டிக் காட்டி சரியான ஆடுகளப் பகுதிக்குப் போய் சர்விஸ் போடச் செய்ய வேண்டும்.

6. ஆட்டத்தில் தவறு நேர்கிற பொழுது

1. பந்து போகும் திசையிலெல்லாம் பார்வையை பின்னதாகவே செலுத்திக் கொண்டு சென்று, எந்தத் தவறு நடந்தாலும், உடனே எந்தவிதத் தயக்கமும் இன்றி, தாமதம் இல்லாமல் அறிவித்துவிட வேண்டும்.

2. 'தவறு என்று அறிவிக்க வேண்டும் என்று எந்த ஆட்டக்காரரும் உங்களிடம் முறையிட வேண்டும் (Appeal), என்று நீங்கள் காத்துக் கொண்

பூப்-8