பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

டிருக்க வேண்டிய அவசியமேயில்லை. தவறு என்றால் தவறுதான். உடனே அறிவித்துவிடுவதுதான் சாலச் சிறந்த முறையாகும்.

3. ஆட்டக்காரர்களின் முறையீட்டுக்குப் பிறகு தான் தவறினைக் கூற வேண்டும் என்று ஒரு சில நடுவர்கள் தவறான கருத்துடன் செயல்பட்டு வருகின்றார்கள். அது தவறான கருத்தாகும்.

ஆட்டக்காரர்கள் முறையிட்டால், சரியென்றால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதற்காக அவர்கள் முறையிட்டால்தான் அறிவிக்க வேண்டும் என்பதில்லை. அடிக்கடி ஆட்டக்காரர்கள் சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும் தொடங்கிவிட்டால், ஆட்டத்தில் குழப்பம் ஏற்படவும், நடுவரின் நிலைமை பரிதாபத்துக்கும் ஆளாகிவிடும். .

4. முக்கியமல்லாததற்கெல்லாம் அடிக்கடி, அற்பத் தனமாக முறையிட்டு, கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற ஆட்டக்காரர்களை கடுமையாக எச்சரித்து (Warn)விட வேண்டும். அப்பொழுதுதான் நடுவராகிய நீங்கள், நிம்மதியாக, எந்தவிதத் தவறுமின்றி, ஆட்டத்தை அமைதியாக நடத்திச் செல்ல முடியும்.

5. வலையோரத்தில் பந்து வரும்போது, வலையில் பட்டு விடுகின்றதா என்பதை எச்சரிக்கையுடன் கவனித்து, அறிவித்துவிட வேண்டும்.

வலையினைப் பந்து தொட்டாலும் (Touch) சரி. அல்லது உருண்டாலும் (Roll) சரி, உடனே அறிவித்து விட வேண்டும்.