பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

 6. பந்தை எடுத்தாடுவதற்கு முன்பாக இருந்தாலும் சரி, அல்லது பந்தை எடுத்தாடிய பிறகாயினும் சரி, அந்த முயற்சியில் இரண்டு பந்தடி மட்டைகள் (Bats) மோதிக்கொண்டால் (Clash), அதனைத் தவறு என்று உடனே அறிவித்துவிட வேண்டும்.

7. பந்தெடுத்தாடும் போது, பந்தடி மட்டை தரையில்பட்டுவிட்டால், அது தவறில்லை. (Not fault)

8. இதுபோன்ற தருணங்களில், எதிராட்டக்காரர்கள் பந்தைத் தரையிலிருந்துதான் எடுத்தாடினார்கள் என்று வேண்டுமென்றே முறையிடவும் செய்வார்கள்.

நடுவராகிய உங்களுக்கு பந்து தரையில் பட வில்லை என்று திண்ணமாகத் தெரிந்துவிட்டால், தவறில்லை என்று மறுத்துவிட்டு, ஆட்டத்தைத் தொடரச் செய்ய வேண்டும்.

உங்களுக்கு ஏதேனும் இந்த சமயத்தில் சந்தேகம் எழுந்துவிட்டால், 'அதே வெற்றி எண்ணுக்காக மீண்டும் ஆடுங்கள்' (Let) என்று கூறி ஆடச் செய்ய வேண்டும்.

9. பந்தாடும் மட்டையின் ஒரத்தில் பந்து பட்டுப் போகிறதா (Tip) என்பதையும் நீங்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்துவிட்டால், அதை மட்டையில் பட்டது (Tip) என்று அறிவித்து விடவேண்டும்.

உங்களுக்கும் மட்டையில் பந்து பட்டதா இல்லையா என்ற சந்தேகம், எழுந்த நிலையில், எதிராட்டக்காரர்கள்