பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

 1. முடிவுபெறாத ஆட்டங்கள் (Unfinished Matches) எல்லாம் திரும்பவும் ஆடப்பெற வேண்டுமானால், தொடக்கத்தில் இருந்தே ஆடப்பட வேண்டும் என்பது விதி. இதனால், நடுவரானவர் ஆட்டம், முடிவுபெறவில்லை என்று அறிவிப்பதற்கு முன்னர் மிகவும் நிதானத்துடன் ஆராய்ந்து தெளிந்த பிறகே அறிவிக்க வேண்டும்.

போட்டியில் தோற்றுக் கொண்டிருக்கும் குழுவினர் சிலர், தாங்கள் தோல்வியடையப் போகிறோம் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர், விவேகத்தை விட்டுவிட்டு வேகத்தை ஆட்டத்தில் காண்பிப்பார்கள். வேறு குறுக்கு வழியைக் கையாள முயல்வார்கள். அதாவது, 'பொழுது போய்விட்டது. பந்து கண்ணுக்குத் தெரியவில்லை. அதனால் மறு நாள் ஆட அனுமதிக்கவேண்டும் என்றெல்லாம் மாற்றம் கேட்பார்கள்.

மறுநாள் ஆடினால், புதிய ஆட்டமாகத்தானே ஆடவேண்டும். அப்படியானால் எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தான், அவர்கள் கேட்பார்கள். இதனால் தான் நடுவர் கவனமாகவே தனது தீர்ப்பை அளிக்க வேண்டும் என்கிறோம்.

2. ஒரு சில வெற்றி எண்கள் (Points) பெற்று விட்டால், ஆட்டம் முடிவடைந்து விடும் என்ற நிலைமையில் இருக்கும்போது, ஆட்டத்தை நிறுத்தி மறுநாள் ஆடச் சொல்லலாம் என்று எடுக்கின்ற முடிவானது: வெற்றிபெற வாய்ப்புள்ள குழுவிற்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிப்பது போல் ஆகிவிடும் என்பதால், ஆராய்ந்தே நடுவர் தீர்ப்பை வழங்கவேண்டும்.