பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயிற்சியாளரின் பணிகள்


விளையாட்டில் பங்குபெறும் வீரர்களுக்குரிய திறன்களை, நடுவருக்குரிய கடமைகளை இதுகாறும் விளக்கமாகக் கூறிவந்தோம். ஆனால், விளையாட்டு வீரர்களை உருவாக்கி, ஒன்றுபடுத்தி, ஒரு குழுவாக்கி, ஆடுகளத்தில் இறக்கி விட்டுவிட்டு, வெளியில் நின்று அனல் மேல் நிற்பவர்கள் போல ஆட்ட நேரம் முழுவதிலும் உணர்ச்சிப் பிழம்பாக நின்று, உற்றுழி உதவிவரும் பயிற்சியாளர்கள், குழு மேலாளர்கள் அனைவரும்: தங்களது கடமைகள் என்னென்ன என்பதை: இன்னும் உணர்ந்து செயல்பட்டால், சிறப்புக்குரிய, பெருமையை எய்திடலாம்.

1. பயிற்சியாளர்கள், தங்கள் குழுவிற்கான ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் தனிப் பட்டஒருவர் மேல் வைத்திருக்கும் அன்புக்காக, அல்லது அபிமான்த்திற்காக அல்லது சுயலாபத்திற்காக என்பதையெல்லாம் அறவே நீக்கி வைத்துவிட்டு தம் குழு மகத்தான ஒன்றாக அமைய வேண்டும் என்ற முழுக் கருத்துடனே தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுப்பதில் தவறு நேர்ந்துவிட்டதென்றால், அது இறுதிவரை தொடரும். இழுக்காகிப் படர்ந்து அதுவே அவமானமாக ஒங்கி நிற்கும்.