பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

 2. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டக்காரர்களுக்கு:ஆட்டத்திறன்கள் பற்றி பயிற்சியளிப்பதற்கு முன்னதாக அவர்கள் ஒழுக்கம், கண்ணியம் கட்டுப்பாடு தன்னடக்கம், இவற்றில் அதிகக் கவனம். செலுத்தும் வகையில் பேசி, ஒழுங்குற நடந்து கொள்ளமாறு வற்புறுத்தி, வழிநடத்திச் செல்ல வேண்டும்.

உயர்தரமான் திறமையுள்ள, ஆனால் ஒழுங்கற்ற கட்டுப்பாட்டினை மீறி நடந்து கொள்ளும் ஆட்டக்காரர்கள் ஒரு குழுவிற்கு வரப்பிரசாதமல்ல்-அவர்கள் தீராத அவமானச் சின்னமாகும். அவர்களுக்கு. அறிவுரை கூறி திருத்த வேண்டும். திருந்தாதவர்களை குழுவிலிருந்தே அப்புறப்படுத்திவிட வேண்டும்.

சொல்லில் கண்ணியமும், செயலில் கட்டுப்பாடும். எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர்கள் ஆழ்ந்த அக்கறை செலுத்த வேண்டும் . 3. எப்பொழுதும் தனிப்பட்ட ஒரு ஆட்டக்காரரைப் புகழ்ந்து கொண்டிருக்கக் கூடாது. அவர் என்ன தான் சிறந்த ஆட்டக்காரராக இருத்தாலும், நேராகப் புகழ்ந்து கூறத் தொடங்கிவிட்டால், அவருக்குத் தலைக்கணம் ஏறி, தற்பெருமை ததும்பி வழியத் தொடங்கிவிடும். அதனால் அவர் ஆட்டமும் குலைந்து, சீரழிந்தும்விடும். குழுவின் வலிமையும் சின்னபின்னமாகச் சிதறிப் போய் விடும்.

ஆகவே, குழுவின் வலிமைக்காகவே எல்லா ஆட்டக்காரர்களையும் உற்சாகப்படுத்திப் பேச வேண்டும்.அதுவே ஒரு ஐக்கிய மனப்பான்மையை வளர்த்து விடும். ஒருவரைப் புகழ்ந்து மற்றவரை மட்டந்தட்டி உற்சாகப்படுத்துகிற தன்மையில் அமைந்தால், அது