பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

 எதிராட்டக்காரரை இகழ்வாகப் பேசி, உங்கள் ஆட்டக்காரரை உயர்வாகப் பேசி உள்ளே அனுப்பி, வைத்தால், அது உருப்படாத் தனத்திற்கு அடிகோலி விடும். ஆதலால், 'நன்றாக ஆடுங்கள். கவனமாகி ஆடுங்கள்’ என்று எச்சரித்து, உற்சாகப்படுத்தி ஆட விடவேண்டும்.

8. நீங்கள் ஏற்படுத்தி விடுகிற நல்ல உற்சாகமே, அவர்களுக்குத் தன்வலிவையும் தன்னம்பிக்கையும் ஊட்டி விடுவதாக அமைய வேண்டும். அதுவே, அவர்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும் 'டானிக்' காக அமைந்துவிடும்.

9. ஆட்ட நேரத்தில், ஒரிரு ஆட்டக்காரர்கள். வழக்கம்போல் ஆடாமல், தடுமாறி ஆடுவதும் உண்டு. அன்றைய மனோநிலையில் அவரால் சிறப்பாக ஆட முடியாமல் போனால், ஆட்டக்காரர்களுக்கிடையே இடம் மாற்றி நிற்க வைத்து, தைரியத்தை ஏற்படுத்தி சந்தோஷமாக ஆடச்செய்யவேண்டும். மாறாக, சலித்துக் கொண்டு இழித்தும் பழித்துப் பேசத் தொடங்கினால் 'உருட்டி விழிக்கப் போய் உள்ள விழியும் போன' கதைபோல் ஆகிவிடும். ஆகவே, சமாளிக்கத் தெரிந்தவராக நீங்கள் அங்கே நடைபோட வேண்டும்.

10. உங்கள் குழுவைவிட, எதிர்க்குழு ஒருசில வெற்றி எண்கள் அதிகம் எடுத்து விட்டால், உங்கள் குழுவினர் தொய்ந்து போகக் கூடிய நிலையெழும். அப்பொழுது, அவர்கள் அதைரியப்படாமல் ஆடுமாறு தூண்டவேண்டும்.

ஒருசில வெற்றி எண்கள் அதிகம் எடுத்துவிட்டதாலேயே அந்த ஆட்டம் முடிந்துவிடுவதில்லை. கடைசி