பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

 என்பதை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில்,சர்விஸ் போட்டதை எடுத்தாடும். பொழுது தவறிழைத்தால் எதிர்க்குழுவிற்கு வெற்றி எண் அல்லவா கிடைத்து விடுகிறது.

தன் குழு சர்விஸ் போடும் பொழுது தவறிழைக்கலாமா என்றால் அப்பொழுதும் வெற்றி எண் பெறுகிற, வாய்ப்பல்லவா இழக்க நேரிடுகிறது? ஆகவே, தன் குழு சர்விஸ் போடும் போழுது எச்சரிக்கையாக இருந்து ஆடுவதை: இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் எதிராட்டக்காரர் சர்வீஸ் போடும் போது தவறிழைக்காமல் ஆடவேண்டும்.

எப்பொழுதும் கவனத்துடன் ஆடவேண்டும். என்பது தான் பொதுவான கருத்து, ஆனால் எதிராட்டக்காரர் சர்விஸ் சமயத்தில் விழிப்புடன், ஆட வேண்டும் என்பதையே ஆட்டக்காரர்களுக்கு வலியுறுத்திட வேண்டும்.

13. ஆட்ட நேரத்தில், எப்பொழுதும் அசட்டையாகவோ, அலட்சியமாகவோ இறுமாப்பாகவோ, இருந்து ஆடவே கூடாது. வெற்றி பெற இன்னும் ஒரு வெற்றி எண் (Point) தான் இருக்கிறது என்ற நிலையில் உள்ள் குழுக்கள் எத்தனையோ தங்களது தலைக் கனத்தின் காரணமாக தான் தோன்றித்தனமாக ஆடி, தோல்வியைத் தழுவி இருக்கின்றன.

மமதையுடன் ஆடுபவர்களுக்கு அதிர்ஷ்டம் கூட துணைவராது. உண்மையுடன் உழைத்து ஆடுபவுகளுக்கே வெற்றி தேவதை வாழ்த்தி அருள்வாள்.

14. ஆட்ட நேரத்தில் ஒவ்வொருவரும். இழைக்கின்ற தவறுகளை கவனித்துக்கொண்டே வந்து அந்தந்த ஆட்டங்களுக்கு இடையில் கிடைக்கிற ஒய்வு