பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

அடித்தெறியக் கூடாது. அவ்வாறு அடித்தெறிவோர் பந்தை அனுப்புகின்ற நேரத்தில், எதிர்க் குழுவினர் பந்தைத் திருப்பி அனுப்புவதற்கு முயற்சி செய்தால், எதிர்க் குழுவினர் ஆடத் தயாராக இருந்ததாகவே கருதப்படுவார்கள்.

6. விளையாடுகின்ற நேரத்தில், வலைக் கோட்டைக் கடப்பதற்கு எந்த ஆட்டக்காரரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

5. ஆட்டத்தில் நிகழும் தவறுகள் (Faults)

தவறுகள் : பந்தை அடித்தெறியும் குழுவிலிருந்து, யாராவது ஒருவர் தவறிழைத்தால், அடித்தெறிவோர் (Server) அந்த வாய்ப்பை இழப்பார். அதே பந்தை ஆடும்போது, எதிர்க் குழுவில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் தவறிழைத்தால், அடித்தெறிந்த குழுவிற்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

கீழே குறிப்பிடப்பட்டிருப்பவை எல்லாம் தவறுகளாகும்.

1. அடித்தெறியும் ஆட்டக்காரர், பந்தை அடித் தெறியும் போது, அடிப்பதில் தவறி விடுதல் (Miss the stroke).

2. பந்தை ‘மேலே போட்டு’ (Over hand) அடித்தல். (அடித்தெறியும்போது, அடிப்பவருடைய இடுப்பளவுக்குக் கீழாகத்தான் பந்து இருக்க வேண்டும். இடுப்பளவுக்கு மேல் பந்து அடித்தாடப்படும்போதுதான், தவறென அறிவிக்கப்படும்.)