பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழாக் குழுவினரின் வேலைகள்


பூப்பந்தாட்டத் தொடர் போட்டிகள் (Tournaments) அடிக்கடி பல இடங்களில் நடைபெறுகின்ற முறைகளைப் பார்க்கும் பொழுது, ஆர்வத்தின் எழுச்சியில் தான் இருக்கின்றனவே தவிர, அடிப்படை விதிமுறைகளுடன் ஒரு சில போட்டிகள்கூட நடைபெறுவதில்லை.

போட்டி என்பார்கள். பலர் வந்து கூடுவார்கள். விருப்பம் போல், தங்கள் வசதிகளுக்கேற்ப போட்டி விதிகளை மாற்றி வைத்துக்கொள்வரர்கள்.தங்களையும் குழப்பிக்கொண்டு, ஆட்டக்காரர்களையும் குழப்பிவிட்டு, பார்வையாளர்கள் நல்ல ஆட்டம் பார்க்க வந்து, கூத்து பார்த்து விட்டுப் போவது போன்ற சூழ்நிலையையும் தோற்றுவித்து விடுவார்கள்.

போட்டி தொடங்கிய பிறகு ஒரு குழு வரும். எங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சில சமயங்களில் கெஞ்சும்; பல சமயங்களில் மிஞ்சும்.

காலையில் 7 மணிக்குப் போட்டி என்ருல், ஆடவரும் குழுவினர் 9 மணிக்கு சாவகாசமாக வருவதைக் கூட ஏனென்று கேட்க முடியாத நிலையில் போட்டி நடத்துபவர்கள், இருக்கத்தான் இருக்கின்ருர்கள். அவ்வாறு தாழ்ந்த நிலைக்குப்போய் விடாமல், முறையோடு,