பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்போடு போட்டிகளை நடத்தினால்தான், நடத்துவோருக்கும் பெருமை. ஆடுவோருக்கும் பெருமை. ஆட்ட த்திற்கும் பெருமை.

போட்டி நடத்துபவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும், கீழே காணும் குறிப்புக்களைப் பின்பற்றி போட்டிகளை நடத்தினால், இன்னும் சிறப்புற நடத்தி வெற்றிகரமாக பவனிவர முடியும் என்பதால், விவரமாகத் தந்திருக்கிறோம்.

1. போட்டிகள் நடத்தத் திட்டமிடுதல்:

1. போட்டிகள் நடத்த வேண்டுமென்று விரும்புகின்றவர்கள், மழைகாலம் அல்லது காற்றடி காலம் இவற்றை அனுசரித்து, வேறு பருவங்களில் நடத்திட முடிவெடுக்க வேண்டும்.

2. போட்டிகளில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பும் குழுவினர்களுக்கெல்லாம், யோசித்து பங்குபெற பயிற்சி கொள்ள அவகாசம் தருவது போல், ஒரு மாதத்திற்கு முன் கூட்டியே, போட்டியின் விவரக்குறிப்புக்கள் அடங்கிய தாள்களை (Prospectus) அனுப்பிவைத்துவிட வேண்டும்.

8. வந்திருக்கும் குழுக்களின் பட்டியலை நிரல் படுத்திக்கொண்டு, அவைகள் போட்டியிடுதற்கேற்ற வகையில் பிரித்து (Fixtures), ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, இடம், காலம், நேரம்பற்றிய எல்லா விவரங்களையும் தெரிவித்து விடவேண்டும்.

4. விளையாட வருகின்ற குழுக்களின் பார்வையில் படுகின்ற மைய இடத்தில், ஒரு விவரப் பிரதியையும்