பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

கரும்பலகையில் ஒட்டி வைத்து தெளிவுபடுத்திவிடவேண்டும்.

5. எக்காரணத்தைக் கொண்டும் ஆடுகின்ற குழுக்களின் விளையாடும் தேதியையோ, நேரத்தையோ மாற்ற முயல்கின்ற வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விடாதீர்கள். திட்டமிட்டபடியே, தீர்மானித்தவாறே போட்டிகளைத் தொடர்ந்து நடத்திச் செல்ல முயலுங்கள்.

2. போட்டி நடக்கும் நாளில்:

1. போட்டி நடைபெறுகின்ற ஆடுகளங்களையெல்லாம் காற்று, சூரிய ஒளி இவை மிகுதியாக வராது தடுத்துக் காக்கும் கட்டிடங்களை ஒட்டியே நீங்கள் அமைத்திடல் வேண்டும். ஓரிரு ஆடுகளம் மட்டும் போதாது. இடவசதிக்கேற்ப நான்கைந்து ஆடுகளங்கள் இருந்தால் தான், திட்டமிட்டபடி வழுவாமல் நடத்திச் செல்ல முடியும்.

2. போட்டி நடப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே ஆடுகளங்களுக்குச் சென்று, வலை சரியாக இழுத்துக் கட்டப்பட்டிருக்கின்றதா; சுண்ணாம்புக் கோடுகள் சரியாகப் போடப்பட்டிருக்கின்றனவா; நடுவருக்குரிய உயர் ஆசனம், குறிப்பாளருக்குரிய மேசை நாற்காலி எல்லாம் இருக்கின்றனவா; மற்ற ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பனவற்றையும் கண்டறிந்து, செய்யப்படாதன வற்றை உடனே செய்து முடித்துவிட வேண்டும்.

மாலை நேரத்தை விட, காலை நேரத்தில் தான் போட்டிகள் நடத்த ஏதுவான நேரமாகும். காரணம்