பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னவென்றால், காற்றின் வேகம் சற்று குறைவாக இருக்கும். ஆகவே, காலையிலேயே அதிகப் போட்டி ஆட்டங்களை நடத்தி முடித்து விட வேண்டும்.

4. காலையிலாகட்டும், மாலை நேரமாகட்டும்; போட்டி ஆட்டங்களை நடத்துவதாயிருந்தால், குறிப்பிட்ட நேரத்திலே தொடங்கிவிட வேண்டும். காலந்தாழ்த்துவதால், நீங்கள் பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

காலைப் போட்டிகளை நேரங்கழித்துத் தொடங்கினால், சூரிய ஒளி சற்றுக் கடுமையாக இருப்பதுடன், -கண்ணுக்கு நேராக அடிக்கும்போது, ஆடக் கஷ்டமாக இருக்கிறதென்று ஆட்டக்காரர்கள் குறை சொல்வார்கள். கஷ்டப்பட்டே ஆடுவார்கள்.

அதேபோல், மாலையில் போட்டி என்றால், நேரம் கழித்துத் தொடங்கும்போது, ஆட்டத்தின் இழுபிடியில், இருட்டிப்போக நேரிடும். அப்பொழுது, ஆடுவதற்கேற்ற வெளிச்சம் இல்லை என்று நேரத்தின்மேல் சாக்கு போட்டுக் கொண்டு, தோற்க இருப்பவர்கள் தப்பித்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

ஆகவே, காலையும் மாலையும் சரியான நேரத்தில் போட்டிகளைத் தொடங்குதல் மிக மிக முக்கியமாகும்.

5. ஒவ்வொரு போட்டி ஆட்டத்திற்கும், அந்தந்த ஆடுகளத்திற்கென்று நடுவர்கள், குறிப்பாளர்கள் கோடுகாப்பாளர்கள் இவர்களை நியமித்து விடவேண்டும். அவ்வாறில்லாமல், ஆடுகளத்தினுள் ஆட்டக் காரர்களை நிற்க வைத்துக்கொண்டு, நடுவர்களுக்கா ஆட்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கக் கூடாது.