பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

6. நடுவர்களையும் ஆட்டத்தில் ஞானமும் தேர்ச்சியும் உள்ளவர்களாகப் பார்த்துத்தான் நியமிக்க வேண்டும். யாராவது ஒரு ஆள் இருந்தால் போதும் என்ற ஏனோதானோ மனப்பான்மையில் ஆள்பிடிக்கக் கூடாது.

7. வெற்றி எண்களைக் குறிப்பதற்கான குறிப்பேடுகள் ஆட்டத்திற்குமுன் தயாராக இருத்தல். வேண்டும். - -

8. தேவையான எண்ணிக்கைக்குமேல், பக் துகள் வைத்துக் கொண்டிருப்பதும் அவசியமாகும்.

9. ஆட்டக்காரர்கள் அமர்ந்திருக்க வசதிகள் செய்து தருவதுடன், பார்வையாளர்களுக்கும் கல்ல. அமரும் வசதிகள் செய்து தந்தால், கூட்டத்தில் குழப்பத்தையும் இடைஞ்சல்களையும் தடுத்து விடலாம்.

10. குடிநீர் வசதியையும் கவனமாகப் பார்த்து ஏற்பாடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

11. ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பிறகும். ஒவ்வொரு குழுவின் தலைவரிடமும், நடுவர்களிடமும் குறிப்பேட்டில் கையெழுத்துப் பெற்றுக் கொள்வதும் மிக முக்கியமானதாகும்.

இவ்வாறு நல்ல விதமாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, மகிழும் விதத்தில் போட்டிகளை நடத்திட, போட்டி நடத்துவோர் முன்வர வேண்டும்.

அவர்கள் மேற்கொள்கின்ற முயற்சி சற்று கஷ்டமானதுதான் என்ருலும், செய்வன திருந்தச் செய்து