பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கொண்டு, ‘தொடர்ந்து விளையாடுங்கள்’ என்று சொல்லுகின்ற பொழுது, அந்த நேரத்தில் பந்தை அடித்தாடும் ஆட்டக்காரர் சரியாகத் திருப்பி அனுப்ப இயலாமல் தவறிழைத்து விட்டால், மீண்டும் அதே வெற்றி எண்ணுக்காக (Point), அடித்தெறியும் வாய்ப்பைத் தந்து, (Service ) ஆட்டத்தைத் தொடங்கிட மண்டும் (Let).

10. விளையாடுங்கள் (Play) என்று நடுவர் ஆணை தந்தபிறகு, ஆட மறுக்கின்ற குழு, ஆட்டத்தை இழக்க நேரிடும்.

11. தொடராட்டப் போட்டியை நடத்துகின்ற நிர்வாகக் குழுவின் (Tournament Committee) இணக்கம் இன்றி, போட்டி ஆட்டம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், எந்த நடுவரையும் மாற்றக்கூடாது.

12. கோடுகள் பற்றிய நிகழ்ச்சிகளைப்பற்றி முடிவெடுக்கின்ற உரிமையை கோடு காப்பாளர்களும்; வலையைப் பந்து தொட்டதா என்பனவற்றை ஆய்ந்து முடிவெடுக்கும் உரிமையை வலைக்கான நடுவரும் பெற்றிருக்கின்றார்கள்.

13. வெற்றி எண்களைச் சரியாகக் குறிப்பேட்டில் குறித்துக் கொள்வதுடன், அதைத் தெளிவாக அறிவிக்க வேண்டியது குறிப்பாளரின் (scorer) கடமையாகும்.

14. 10வது விதியில் கூறப்பட்டிருப்பதைத் தவிர போட்டி ஆட்டத்தில் ஒரு குழு வெற்றி பெற வேண்டுமென்றால், ஒன்று, விளையாடியிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு குழு ஆடாமல் தவிர்த்திருக்க (Given up) இருக்க வேண்டும்.