பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

15. எதிர்பாராத காரணங்களினால் அதாவது கடுமையான மழை, அல்லது போதிய வெளிச்சமின்மை போன்ற சூழ்நிலையினால் (ஆட்டம் ஆரம்பித்து) இடையிலே நிறுத்தப்பட்டு, தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டால், மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற நிலை எழுகிற பொழுது, புதியதாகவே (Fresh Game) ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

6 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடவேண்டும் என்றால், இரண்டு குழுக்களும் ஏற்கனவே எடுத்திருந்த முறை ஆட்டம் இவற்றை வைத்துக்கொண்டு, அதிலிருந்தே தொடர்ந்து ஆட வேண்டும்.