பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

3. வடக்கு தெற்கு நீளவாட்டில் சரியாக ஆடுகளம் அமைக்க இயலாதவாறு மைதானம் அமைந்திருந்தால், சற்று ஏறத்தாழ மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நேராக சூரிய ஒளி பார்வையில் விழாதவாறு அனுசரித்து, ஏற்பாடுகளைச் செய்து கொள்ளவேண்டும்.

4. ஆடுகளம் அமைக்கவிருக்கும் இடத்திற்கு அருகாமையில் பக்கவாட்டிலோ அல்லது முன் புறத்திலோ, உயர்ந்த கட்டிடங்கள் இருப்பது போல் ஆடுகளம் அமைக்கப் பெற்றால், அதுவே நல்லதோர் ஆடுகளமாக அமைந்துவிடும். அது சூரிய ஒளியைத் தடுத்துவிடும் என்பதனால் மட்டுமல்ல; பந்தின் எடையானது இலேசாக இருந்து, வலைக்கு மேலே உயரத்திலேயே ஆடப்பெறுவதால், பந்தின் திசை அடிக்கடி காற்றினால் மாற்றப்படாமல் இருக்க, அடிக்கும் காற்றின் வேகத்தைத் தடுத்துக் காத்து நிற்க, அந்தக் கட்டிடங்கள் உபயோகப்படும்.

5. பக்கவாட்டில் கட்டிடங்கள் தேவை என்பதால் சுவர் ஓரத்திலேயே பக்கக் கோட்டை (Side Line) அமைத்து விடலாம் என்று நினைத்து அமைப்பது தவறாகும். கட்டிடத்திலிருந்து, குறைந்தது 5 அடி தூரத்தில் ஆடுளத்தின் பக்கக்கோடு இருப்பதுபோல் அமைப்பது தான் அறிவுடமையாகும்.

ஆட்ட நேரத்தில், உற்சாகமாக ஆடும் ஆட்டக்காரர்கள் பந்தாடும் ஆர்வ நிலையில் தம்மை மறந்து போய் சுவற்றில் மோதிக்கொண்டுவிட நேரிடும் என்பதால் தான் சுவரையே பக்கக் கோடாகப் பாவிக்குப் எண்ணத்தை விட்டுவிட வேண்டும் என்கிறோம்.