பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வேண்டும் (Pour). அதாவது, 1 அங்குல உயரமாவது தண்ணீர் தேங்கி நிற்பதுபோல் ஊற்றி, அது நன்றாகக் காய்ந்தபிறகு, அதன்மேல் நல்ல மென் மணலைத் தூவ வேண்டும். பின்னர், அதிக எடையில்லாத சிறிய கல்லுருளை (Roller) கொண்டு மேலும் கீழுமாக உருட்ட வேண்டும்.

முன்னே விளக்கியதுபோல, தண்ணீரை ஊற்றி, காய்ந்ததும் மென் மணலைத் தூவி, மீண்டும் உருட்டி, இவ்வாறு தரைப் பதப்பட்டு வருகிறபோது, கனமான கல்லுருளை கொண்டும் உருட்டலாம், ஆனால், அந்தத் தரையை நன்கு காய்ந்து போகுமாறு விட்டுவிடக் கூடாது. அவ்வாறு காயவிட்டால், தரை பிளவுபடவும், விரிசல் அடையவும் கூடும். விரிசல் அடையாமல் தரையைப் பதமாக வைத்திருக்க, தொடக்கத்திலே தரையின் மேற்பரப்பில் அதிகமாக மணலைக் கொட்டி விட்டால், அது தண்ணீரை இழுத்துக் கொண்டு, தரை காய்ந்து விடாமல் ஈரப் பசையுடன் வைத்துக்கொண்டு விடும்.

முடிந்தால், குறைந்தது மூன்று முறையாவது தண்ணீரை ஊற்றி ஊற்றி மண் போட்டு போட்டு உருட்டி சரிசெய்யலாம்.

இவ்வாறு மைதானப் பரப்பை சரிசெய்துவிட்டால், நமக்கு கடினமுள்ள அதே சமயத்தில் கற்கள் நிரம்பியிராத ஒரு நல்ல ஆடுகளத் தரை கிடைத்து விடுகிறது. அதுவே, ஆடுவதற்கு நல்லதோர் இயக்கத்தை இதமான முறையிலே அளித்தும் விடுகிறது.

மைதானம் முடிந்துவிட்டதென்றால், அடுத்து நாம் சிந்திக்கவேண்டியது வலைகட்டும் கம்பங்களை எவ்வாறு தயார் செய்வது என்பதுதான்.