பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

ஒரு சில இடங்களில், பக்கம் பக்கமாக இரண்டு ஆடுகளங்களைப் போட்டு அமைத்து விடுவதும் உண்டு. அந்த சமயங்களில், இரும்புக் கம்பங்கள் அல்லது கான்கீரீட் தூண்கள் இருந்தால், இரண்டு ஆடுகளத்திற்கும் பயன்படுவது போல வலையை இழுத்துக் கட்ட ஏதுவாகும். அதற்கு ஏற்றற்போல் இருபுறமும் கொக்கிகளையும் மாட்டி வைக்கலாம்.

மேலே கூறியனவற்றை மனதில் கொண்டு, கம்பங்களைப் பதிப்பவர்கள் செயல்பட்டால் சிறப்பாக அமைந்துவிடும்

3. வலை

1. வலையின் நீளம் 40 அடியாகவும், அகலம் 2½ அடியாகவும் இருக்க வேண்டும்.

2. வலையின் இடையிடையே அமைக்கப் பெற்றிருக்கும் இடைவெளிகள் பெரிதாக இருக்கக்கூடாது. ஏனெனில், ஆட்ட நேரத்தில் பந்து இடைவெளிக்குள் புகுந்து போவது தெரியாமற் போய்விடும் அல்லவா! அதனால், இடைவெளியானது 1 அங்குல அகலத்திற்கு மேற்படாதவாறு அமைந்திருப்பது போல் பின்னப்பட்டிருக்க வேண்டும்.

3. வலையின் மேலுயரம் ஏதாவது ஒரு வண்ணத்தில் 2 அங்குல அகலத்தில், நாடாவால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வலையின் வண்ணம் வெண்மையானதாக இருக்கலாம். அல்லது வேறு எந்த வண்ணத்தில் இருந்தாலும், ஒரே நிறமாக இருந்தால் நல்லது. அத்துடன் வேறு எந்த