பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நிறத்தில் வலையைத் தேர்ந்தெடுத்தாலும், அது, ஆடுகளத் தரையின் மண் நிறத்திற்கு மாறுபட்ட வண்ணம் உள்ளதாக அமைந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

4. பந்து

மஞ்சள் நிறமுள்ள கம்பளி நூலால் முறுக்கிப் பின்னப்பட்டு உருவாக்கப்பட்ட பந்தின் கனமானது 1⅛ தோலாவிலிருந்து 1¼ தோலாவுக்குள் இருக்க வேண்டும்.

பந்தின் அளவானது 2 அங்குலத்திலிருந்து 2 அங்குலத்திற்கு மிகாத விட்டமுள்ளதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நல்ல தரமான பந்து என்பது, அந்தப் பந்து கொண்டிருக்கும் இறுக்கத்திலும் அழுத்தத்தன்மையிலும், அது அழுத்தப்பட்டவுடன் விரிவடைந்து கொள்ளும் விறைப்புத் தன்மையிலும் தான் என்பதைக் கொண்டே கண்டு பிடிக்க முடியும்.

அதை எப்படித் தீர்மானிப்பது என்றால். ஒரு பூப்பந்தை எடுத்து, உள்ளங் கையில் வைத்து அழுத்திப் பார்த்தால், கையில் அழுத்தம் நீங்கிய உடனேயே அது தன் பழைய முழு பந்தளவை விரைவில் அடைந்து விடுவது தான். பழைய மாதிரி ஆகாத பந்தோ அல்லது மிக மெதுவாக உருப்பெறும் பந்தோ, தரமானது அல்ல என்று நாம் கண்டுகொள்ளலாம்.

5. பந்தாடும் மட்டை (Bat)

இனி, பந்தாடும் மட்டையைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஒரு தரமான பந்தாடும் மட்டையின் நீள-