பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. வாய்ப்புக் கேற்ப வளையுந் தன்மை (Flexiblity)

4. சமநிலை (Balance)

மட்டையின் வடிவமைப்பைப் பார்க்கும்போதே நன்கு தெரிந்துவிடும். தூக்கிப் பார்த்தால், சமநிலையும் புரிந்து விடும். வளையுந் தன்மையுள்ள மட்டை என்பது மட்டையை சற்று வலிமையுடன் அழுத்தி வளைக்கும் போது Pressure) சிறிதளவு வளைந்து கொடுப்பதாகும்.

அதிகமாக வளைந்து கொடுக்கின்ற அல்லது வளையுந்தன்மையே அற்று விறைப்பாக இருக்கின்ற மட்டைகள் ஆடுவதற்குப் பயன்படாதவைகளாகும். அவற்றை நாம் ஒதுக்கிவிடுவது நல்லதாகும்.

அவ்வாறென்றால், ஆட்டக்காரர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய அருமையான மட்டை எது என்று கேட்டால், கைப்பிடிப்புடன் பிடித்தாடும்போது, மணிக் கட்டுக்கு (Wrist) அதிகமான வலியையோ, வேதனையையோ தராத மட்டையே சிறந்த மட்டை என்று சொல்லுகின்றார்கள் ஆட்ட வல்லுநர்கள்.