பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. ஆட்டத்தின் அருமை


பூப்பந்தாட்டத்தை வேடிக்கை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, தானும் அந்த ஆட்டத்தை ஆடி மகிழ வேண்டும் என்ற ஆர்வம் எழுவது இயல்புதான். ஏனெனில், பூப்பந்தாட்டமானது மற்ற விளையாட்டுக்களைப்போல வலிமையான தல்ல. ஆடுவதற்கு மிகமிக எளிமையானது, மென்மையானது, மேன்மையானது, தன்மையானது.

தான் அடிக்கும் பந்தானது அந்தரத்தில் சென்று அழகாகக் கீழே இறங்கி வருவதும், பிறர் அடிக்கின்ற பந்தும் அவ்வாறு வரும்போது அதனை எதிர்கொண்டு அடித்தாடும் அழகும் எவரையும் கவர்ந்து விடுகிறது மட்டுமல்ல, மயக்கியும் விடுகிறது. இந்த ஆட்டத்தை ஆடுவதற்கென்று ஆரம்பத்தில் சிறப்பான பயிற்சி யென்ற எதுவும் தேவையில்லை. இயற்கையான திறன் நமக்குள்ளே நிறைந்து கிடக்கும் தன்மையால் தான். இவ்வாறு இயல்பாகவே ஆடி மகிழ முடிகிறது.

ஏற்கனவே ததும்பித் தளும்புகிற இயற்கையான திறனாற்றலை, கொஞ்சம் விதிமுறைகளுடன் பழகிக் கொண்டால், அவ்வாற்றல் தானே தழைத்துக் கொள்ளும். செழித்துக் கொள்ளும்.

பூப்பந்தாட்டத்தில் திடீர் திடீரென்று சிறந்த ஆட்டக்காரர்கள் உருவாகி வருவதை நாம் அடிக்கடி