பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பிடித்த நிலையில் வைத்துக் கொண்டு ஆடுகிற பழக்கத்தையே தொடக்கத்திலிருந்தே பழகிக் கொள்ள வேண்டும்.

எப்பொழுதும் மட்டையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ‘தயார் நிலையில்’ (Steadiness) இருப்பது கடினம் தான். மணிக்கட்டும் வலிக்கத்தான் செய்யும், அதற்கும் ஒரு மாற்று வழி உண்டு. இன்னொரு கையின் துணையுடன், மட்டையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நின்றால், மட்டையின் எடை இரு கையிலும் சமமாகப் பரவி விழுந்திருக்கும். பந்து தன்னிடம் திடீரென்று வந்து விடுகிறபோது, உடனே சரியான முறையில் எடுத்தாட இந்த அமைப்பு முறை உதவியாகவும் இருக்கும்.

ஆகவே, பந்தாடும் மட்டையை சரியாகப் பிடிக்கின்ற நல்ல பழக்கத்தை தொடக்கத்திலிருந்தே முறையாகப் பின்பற்றி பயில்வது சிறப்பான ஆட்டத்தை அளித்து விடும்.

பூப்பந்தாட்டத்தில், பந்து அடிக்கடி வந்து வந்து போகின்ற ஆட்டமாக இருப்பதால், எப்பொழுது ஒருவருக்குப் பந்து வரும் என்று யாராலும் கணிக்க முடியாததாகையால், ஆடுவதற்குத் தயாராகவே நின்றிருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. அடித்தெறியும் சர்விஸ் முறை (Service)

பூப்பந்தாட்டத்தில் சர்விஸ் என்பது மிகவும் முக்கியமான திறன் நுணுக்கமாகும் (Skill). இதற்கு அதிக அக்கறையும் ஆழ்ந்த கவனமும் தேவையாகும்.