பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

ஒழுங்காக சர்விஸ் போடாததினாலேயே எத்தனையோ குழுக்கள் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்து போயிருக்கின்றன. ஏனெனில், எதிர்க் குழுவிடம் சரியாக சர்விஸ் போட்டு அதில் வெற்றி பெற்றால் தானே வெற்றி எண் (Point) பெறமுடியும்!

கற்றுக் கொள்ளும் ஆரம்ப காலத்தில், சர்வீஸ் போட முயல்பவர்கள் பந்தை சரியாக எதிர்ப்புறம் அனுப்பவேண்டும் என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். தன் கையில் உள்ள பந்திலும், மறுகையில் உள்ள பந்தாடும் மட்டையிலுமே பார்வை இருக்கும். சர்விஸ் போட்டால் போய் சேருமோ சேராதோ என்ற பயமும் - படபடப்பும் இருக்கும். அந்தப் படபடப்பில், மட்டையில் பந்து சரியாக அடி படாமலும் போய்விடும்.

கையிலே பந்தை எடுத்து சர்விஸ் போடுகையில், தான் விரும்பும் எதிர்க்குழு பகுதிக்கு, எதிர்நோக்கும் திசைக்கு, எந்த உயரத்தில் பந்தை அனுப்ப வேண்டும் என்பனவற்றை அனுமானித்து அனுப்புகின்ற ஆற்றலுக்கு முதலில் தன்னம்பிக்கை (Self Confidence ) வேண்டும்.

இந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள சுவர் பயிற்சி முறையைப் (Wall Practice) பின்பற்ற வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள். உயர்ந்துள்ள சுவற்றின் மேல் பந்தை அடித்தால் அது எவ்வாறு திரும்பி வருகிறது, எவ்வாறு அடித்தால் அது எவ்வாறு செல்கிறது; அவற்றில் மோதியபின் அது எவ்வாறு சுழன்று (Spin) வருகிறது; அதனை எப்படி ஆடினால் திரும்பவும் நாம் எதிர்பார்க்கிற இடத்திற்குப்-