பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


போகுமா என்பன போன்ற திறன் நுணுக்கங்களை இன்னொரு ஆட்டக்காரர் துணை இல்லாமலேயே, மிக எளிதாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை சுவர்ப் பயிற்சி அளிக்கின்றது.

இவ்வாறு பந்தினை லாவகமாகக் கையாளுகின்ற (Handle) திறன் வந்துவிட்டால், நினைத்த இடத்திற்கு தவறிப் போகாமல் பந்தை அனுப்புகின்ற ஆற்றல் தானாகவே வந்து விடும். அதற்குப் பிறகு விதவிதமாக சர்விஸ் போடவும், எதிராளிகளை ஏமாற்றி இடம் பார்த்து சர்விஸ் போடவும், எதிராளிகள் எடுக்க முடியாது. திணறிப் போகின்ற அளவுக்கு சர்விஸ் போடவும் திறன்கள் தாமாகவே வந்து உங்களை தஞ்சம் அடைந்து விடும்.

அதை அடுத்து, ஆடுகளத்தின் ஒரு பக்கத்திலிருந்து வலையைத் தாண்டி மறுபுறத்திற்கு நினைத்த இடத்திற்குப் போவது போல, பல இடங்களுக்கும் சர்விசை தன்னம்பிக்கையுடன் போட்டுப் பழக வேண்டும். அதன்பின்னர், தனக்கு எந்த மாதிரியான சர்விஸ் இயல்பாக நன்றாக வருகிறது என்பதைக் கண்டு கொண்டு அதிலே நன்கு தேர்ச்சி பெறவேண்டும்.

4 பந்தாடும் திறமை

பந்தை எடுத்தாடுவதற்கு, கையில் உள்ள மட்டையை, பந்தை நோக்கி வீசி அடித்தாடிவிட்டால் போய்விடும் என்ற நினைவு தவறானதாகும். அதற்கு கால் ஆட்சித் திறனும் (Foot Work) இனைந்து வந்தால் தான் முடியும்.

சரியான உடல் இயக்கம் (Movement) இருந்தால் தான், செயலும் ஒழுங்காக அமையும். கன்னா பின்னா