பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


கிறோம். ஆட இருக்கின்ற ஒருவரின் வலப்புறத்திற்கு வரும் பந்தை மட்டையின் முன்கைப்புறத்தால் ஆடுவதை முன்கைப்புற ஆட்டம் என்கிறோம். அவ்வாறு அவர் ஆடிடும்போது அவரது வலதுகையால் பந்தடிப்போர் என்றால், முன்கைப்புற ஆட்டம் ஆடும்போது அவரது இடதுகால் முன்னே வந்திருக்க வேண்டும். அதாவது மட்டையைப் பிடித்திருக்கும் கை நீளுவதற்கு இணையாக இடதுகால் வந்திருக்க வேண்டும்.

அதேபோல், இடப்புறத்தில் பந்து வரும்போது எடுத்தாடுகின்ற போது, மட்டையின் பின்புறத்தில் எடுத்தாட வேண்டியிருக்கும். அப்போது, ஆடுபவரின் வலது கால் முன்னே வந்திருக்கும்.

(படம் காண்க)

இடது கைப்புறத்தில் வருகின்ற பந்தை மட்டையின் பின்புறத்தில் ஆடுகிறபோது, வலதுகால்