பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

முன்னே வந்திருக்கிறது. அதேபோல், மட்டையின் முன்புறத்தில் ஆடும்போது, வலதுகை செல்கின்ற பக்கத்தில் இடதுகால் முன்னே வந்திருக்க வேண்டும். வலையை நோக்கித் தோள்புறம் சென்றிருக்கிறது. வலதுகால் முன்னே வந்திருக்கிறது. உடலானது பந்தை ஏந்தி அடிக்கும் வகையில் ஏதுவாக வளைந்து வந்திருக்கிறது. இவ்வாறு உடல்நிலை நெகிழ்ந்து வந்தால் தான், பந்தைத் தவறின்றி சரியாக, சரியான இடம் பார்த்து அனுப்ப முடியும். இந்த ஆட்டமுறை ஆழ்ந்த பயிற்சியினால் மட்டுமே பெற முடியும். ஆடப் பழகிப் பயன் பெறுக.

தங்களிடம் பந்து வராமல், சற்று முன் தள்ளி விழும் போது, ஓடிப்போய் எடுத்தாடுவதாக இருந்தாலும், அல்லது பின்புறமாகப் (தலைக்கு பின்புறம்) போவதை பின்னால் ஓடிப்போய் எடுத்தாடுவதாக இருந்தாலும் சரி, இந்தக் கால் ஆட்சித்திறனை எப்பொழுதும் கடைப் பிடித்தே ஆடவேண்டும். அதுவே நல்ல ஆட்டக்காரருக்குரிய ஆட்ட லட்சணமாகும்.

இந்த கால் ஆட்சித் திறனாற்றலைப் பெறுவதற்கு, மிகவும் கடினமாகப் பயிற்சி செய்யவேண்டும். உண்மையாக உழைத்துப் பெற வேண்டிய ஒன்றாகும். இதனை, அவற்றில் பந்தை அடித்து எதிர்த்து வரும்போது ஆடி ஆடிக் கற்றுத் தேர்ந்திட வேண்டும்.

தடுத்தாடுவதும் தாக்கி ஆடுவதும்
( Defence & Offence)

தடுத்தாடுதல்

தாக்கி ஆடும் திறமைக்கு முன், தடுத்தாடும் கலையில் வல்லவராக விளங்கவே ஒவ்வொரு ஆட்டக்காரரும் முயற்சிக்க வேண்டும்.