பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அதன் பின்னர், ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பந்தை அனுப்புவது போன்ற குறிக்கோளுடன், அந்த இடத்தை நோக்கி, அடித்தாடிப் பழகவேண்டும்.

அவ்வாறு அடித்தாடி பழகியபின் பந்தை சரிந்தும் சுற்றியும் போவது போல வெட்டி ஆட (Cut) வேண்டும். அதையே வேகமாக அனுப்புவது போலவும் பழகிக் கொள்ள வேண்டும். இந்த முறையிலே பல அடித்தாடும் முறைகள் (Strokes) உள்ளன. அவற்றை பின் பகுதிகளில் விவரித்திருக்கிறோம். புரிந்து கொண்டு சிறப்பாக பழகிக்கொள்ளவும்.

6. பழகும் ஆட்டக்காரர்களுக்கு சில அறிவுரைகள் :

1. ஆட்டத்திறன்களைப் பழகிக் கொள்ளும் ஆட்டக்காரர்கள் ஆடப்பழகிக் கொள்ளும்போது எடுத்த உடனே எதிராட்டக்காரரை எப்டியாவது ஏமாற்றிவெற்றி எண்கள் (Points) எடுத்து விட வேண்டுமென்றோ அல்லது அடாவடி அடித்தாவது ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடனோ ஆடக் கூடாது.

2. ஆட்ட முறைகளையும், பந்தை எடுத்தாடும் விதிகளையும்,பங்தை அடித்தாடும் தந்திரக்கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் நோக்கமுமே ஆட்டகாரர்கள் மனதில் எப்பொழுதும் நிறைந்திருக்கவேண்டுமே அல்லாது, வெற்றிக் குறிக்கோளையோ, அல்லது எதிராளிகளை குழப்பத்தில் ஆழ்த்தும் வழிமுறைகளையோ மனதில் கொள்ளாமல் பயில வேண்டும். அப்பொழுதுதான், பண்புகள் மிளிரும் ஆட்டக்காரர்களாகப் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்க முடியும்.