பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஏறத்தாழ 1880ம் ஆண்டுக்கு முன்னர், இந்தியாவில் பூப்பந்தாட்டம் போன்ற ஒரு ஆட்டம் ஆடப்பட்டு வந்ததாகவும், அதற்கு ‘பூனா’ என்ற பெயர் சூட்டப்பட்டிருந்ததாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு. அந்தப் பந்தாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பந்தானது, கார்க்குகளாலும், பறவைகளின் இறகுகளாலும் ஆக்கப்பட்டிருந்தது.

இந்த ஆட்டத்தை ஆங்கிலேயே இராணுவ அதிகாரிகள் ஆடி மகிழ்ந்து, அவர்கள் இங்கிலாந்துக்குச் சென்றபோது, கூடவே ஆட்டத்தையும் எடுத்துக்கொண்டு போயினர். 1873ம் ஆண்டு, முதன்முதலாக இங்கிலாந்தில் உள்ள பேட்மின்ட்டன் (Badminton) என்ற இடத்தில் ஒரு விருந்தின் போது ஆடிக்காட்டினார்கள். அதற்குப் பிறகு, இந்த ஆட்டம் பேட்மின்ட்டன் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டுவிட்டது.

பேட்மின்ட்டன் என்றால், இறகுகளால் அமைக்கப்பட்ட பந்தினால், டென்னிஸ் ஆட்டத்திற்குரிய ஆடுகள அமைப்பு போல் உள்ள இடத்தில் ஆடப்படுகின்ற இறகுப் பந்தாட்டத்தையே (Shuttle Badminton) குறிக்கும். கம்பளி நுாலால் ஆன பந்தினால் ஆடப்படுகின்ற ஆட்டத்தை Ball Badminton என்று அழைக்கின்றனர்.

இரண்டு ஆட்டங்களிலும் ஆடுகின்ற முறை ஒத்தாற் போல்தான் இருக்கிறது. எதிர்ப்பகுதி ஆடுகளத்தில் குறுக்குப் பகுதியில்தான் சர்விஸ் போடவேண்டும் - ஒரேமுறையில் தான் அடித்தாடிடவேண்டும் என்று இயைந்தாற்போலவே இருக்கின்றதை நாம் அறிவோம். எவ்வாறு கம்பளி நூலால் ஆன பந்து உருவாகி, ஆடுகளம் சற்றே மாறியது என்பதை ஆட்டவல்லுநர்கள்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

ஆர்வமுள்ளவர்களே அதிக எழுச்சியுடன் ஈடுபடச் செய்கின்ற திறன் நுணுக்கங்கள் நிறைந்த கவர்ச்சிகரமான ஆட்டமாகப் பூப்பந்தாட்டம் விளங்கி வருவதால்தான், பெருவாரி-