பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கத்திக் கூச்சல் போட்டு கலாட்டா பண்ணிக் கொண்டிருக்கும்.

தானே ஆடிடத் திணறிக் கொண்டிருக்கும் போது தம்மை கேலி செய்யக் கூட்டம் ஒன்று இருக்கிறபோது புதிய ஆட்டக்காரர்களுக்கு சூழ்நிலை வேதனையாக மட்டுமல்லாமல், சோதனையாகக்கூட இருக்கும். குழப்பம் மிகுதியாக ஆக, நடுக்கம் ஏற்பட, நைசாக ஆட்டத்தை விட்டு வெளியேறி வந்துவிடுவோமா என்ற நப்பாசை கரையானாய் அரித்துக் கொண்டிருக்கும்.

இதுபோன்ற சூழ்நிலையில் ‘தைரியமே புருஷ லட்சணமாய்’ கொண்டு, தன்னம்பிக்கை இழக்காமல் எவ்வாறு ஆடி முடிப்பது என்பதை பழகும் ஆட்டகாரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கீழே காணும் குறிப்புரைகளைத் தந்திருக்கிறோம்!

1. எக்காரணத்தை முன்னிட்டும், ஆடுகளத்திற்கு வெளியே நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பவர்களின் கூச்சலையும், குழப்பம் தரும் கேலி மொழிகளையும் செவி மடுக்காமல், வெளியில் எதுவும் நடக்காதது போலவே பாவித்துக்கொண்டு, ஆடுகின்ற ஆட்டத்திலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து ஆட வேண்டும். அதாவது, பரபரப்புப் பார்வையாளர்களை ஒரு பொருட்டாகப் பாவிக்காமல், பதட்டப்படாமல் உங்களுக்குத்தெரிந்த, உங்களால் முடிந்த ஆட்டத்தை உற்சாகமாக ஆடிக் கொண்டிருக்க வேண்டும்.

2. எப்பொழுதும் பந்து போய்வரும் திசைப்பக்கமாகவே கண்ணுங் கருத்தும் செல்ல வேண்டும். ‘பந்து தனக்குத்தான் வரப்போகின்றது’ என்பதுபோல நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருக்க-