பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


விரும்பினால் அதிகமாக ஓடி ஆடி, துள்ளிக் குதித்து விரைவிலேயே களைத்துப் போகின்ற அளவிலும் ஆடலாம். வேண்டாம் என்றால் மிக அமைதியாக நின்ற இடத்தில் இருந்தே, பயிற்சி செய்வது போன்ற தன்மையில் நின்று கொண்டு மகிழ்ச்சிக்காகவும் ஆடலாம். இப்படிப்பட்டதோர் இனிய நிலையானது பூப்பந்தாட்டத்தில் நிறைய உண்டு என்பதை ஆடுகின்ற அனைவரும் உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

அத்தகைய அரிய ஆட்டத்தைப் பயில்பவர்கள் பண்பாளர்களாக (Gentlemen) விளங்கிட, தொடக்க நாட்களிலேயே தவறில்லாமல், முறைகேடில்லாமல் பயிற்சிபெற்று எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தினால்தான் கூறியிருக்கிறோம். படிப்பதுடன்நின்று விடாது, பழக்கத்திலும் நிறையப் பெற்று நிறைகுடமாகத் திகழ வாழ்த்துகிறோம் வெற்றி பெறுக இந்த லட்சியத்தில் என்று தொடங்கியும் வைக்கிறோம்.