பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பான்மை அமைந்த (Understanding) சாதாரண ஆட்டக்காரர்கள் ஐவர் இருக்கின்ற குழுவிற்கு, மிக எளிதாக வெல்லக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய உண்டு. பசுக்கள் சேர்ந்து சிங்கத்தை விரட்டிய கதையும், புறாக்கள் ஒன்று சேர்ந்து வலையோடு வானத்தில் பிறந்த கதையும் தான் நமக்கு தெரிந்த கதையாயிற்றே!

கருத்தொருமித்த குழு ஒற்றுமையும், கூடி விளையாடும் குணாதிசயம் மிக்கவர்களையே தேர்ந்தெடுப்பது நல்லதென்ற உண்மை நமக்குப் பளிச்சென மனதில் பட்டாலும், சேர்ந்தாடக்கூடிய ஒரு குழுவை எப்படி அமைப்பது என்ற ஓர் வினாவும் சேர்ந்தே எழுகிறது. அது இயற்கை தானே. அந்தக் கேள்விக்குரிய விடையாக, எவ்வாறு ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இனி ஆராயலாம்.

ஒரு குழுவில் 5 ஆட்டக்காரர்கள் இருந்து ஆடுகின்றார்கள் என்றால், அவர்களின் நின்றாடும் இடங்களை நாம் முதலில் காண்போம்.

முன்னாட்டக்காரர்கள் இருவர் (Forwards)

பின்னாட்டக்காரர்கள் இருவர் (Back Players)

மைய ஆட்டக்காரர் ஒருவர் (Centre Player)

இனி, ஒவ்வொரு ஆட்டக்காரரின் இடத்தையும், அவருக்குரிய தகுதிகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.

முன்னாட்டக்காரர்கள் (Forwards)

முன்னாட்டக்காரர்கள் இரண்டு பேர் என்பது நமக் குத் தெரியும். அவர்களில் ஒருவர் இடப்புற முன்னாட்-

பூப்-4