பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


நினைவில் கொள்ள வேண்டும். பின்னாட்டக்காரர்கள் கடைக் கோட்டிற்கு அருகில் நிற்கிறபோது வருகிற பந்தை அடித்தாடுகின்ற சமயத்தில், எதிர்க் குழுவின் முன்னாட்டக்காரர்கள் வலையோரத்தில் தங்கள் மட்டைகளை உயர்த்திப் பந்தைத் தடுத்தாடத் தயாராக இருப்பார்கள். அப்பொழுது, பந்து அவர்களிடம் சிக்கிக் கொள்ளும். ஆகவே, நன்றாக அடிக்க முடியும் என்ற நிலையில் பந்தை அடித்தாடுவதே புத்திசாலித்தனமான ஆட்டமாகும்.

7. பின்னாட்டக்காரர்கள் எப்பொழுதும் கடைக் கோட்டிற்கு அருகில் நின்று ஆடுபவராகையால், கடைக்கோட்டைக் கடந்து பந்து வெளியே போகிறதா அல்லது பக்கக் கோட்டிற்கு அப்பால் வெளியே போகிறதா என்பதையெல்லாம் கவனமாகப் பார்த்து, சரியான முடிவெடுத்து, உடனே சக ஆட்டக்காரகளுக்கும் தெரிவித்து, உதவி, ஆடிடவேண்டும்.

இவ்வாறு முடிவெடுப்பதற்கு நிதான புத்தியும் ஆழ்ந்த அனுபவமும் வேண்டும். போட்டி ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, மனதில் படபடப்பு ஏற்பட்டு, அதன் பயனாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிற நிலையில், கோட்டுக்கு வெளியே போகின்ற பந்தையும் எடுத்தாடி விடுபவர்கள் பலர் உண்டு.

அதனால், பந்தின் போக்கையும் வரும் வேகத்தையும் கணித்து, அதன் பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்பதை பின்னாட்டக்காரர்கள் மறந்துவிடக் கூடாது. அவர்களது சிறப்பான பொறுப்பை உணர்ந்து ஆடி பெருமை பெற வேண்டும்.