பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கொண்டு, மற்ற ஆட்டக்காரருடைய மனோநிலையையும் ஆட்டத்தையும் கெடுத்துவிடுகின்ற தன்மையில் இவர் இருந்துவிடக் கூடாது.

ஒரு குழுவின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணரும் பொறுப்பும் செயல் சிறப்பும் இவருக்கு இயல்பாகவே அமைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ற குணாதிசயங்களை இவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றாலும் வளர்த்துக் கொண்டாக வேண்டும்.

பிறரது தவறுகளை சுட்டிக் காட்டித் திட்டிக் கொண்டேயிருப்பதைவிட, அவற்றைத் தவிர்த்து ஆடுமாறு கூறி, தட்டிக் கொடுத்து ஆடச் செய்கின்ற தன்மையுள்ளவராகவும் விளங்கிட வேண்டும். இவ்வாறாக, அவரது ஆடும் பணி ஆட்ட நேரத்தில் எவ்வாறெல்லாம் இருந்திட வேண்டும் என்பதையும் விரிவாகத் தந்திருக்கிறோம். அவற்றைப் பின்பற்றி, பெருமையுடைய ஆட்டக்காரர்களாகத் திகழுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1. ஆட்ட நேரத்தில், முன்னாட்டக்காரர்கள் இருவரும் வலைக்கருகே நின்று ஆடுவதைப் போல, இவரும் வலையோரத்தில் நின்று ஆடவேண்டும். அப்பொழுது இவர் மூன்றாவது முன் ஆட்டக்காரர் போல இருந்து ஆடவேண்டும். அதுபோன்ற சூழ்நிலை எப்பொழுது வரும் என்றால், பந்தானது எதிர்க்குழுவினரின் கடைக்கோட்டுப் பகுதிக்கு (பின்னால்) போகும் பொழுது, அங்கிருப்பவர் அடித்தாடி பந்தை அனுப்புகின்ற தருணத்தில், இவ்வாறு மைய ஆட்டக்காரர் வலையோரத்தில் நின்று ஆடுவது தான் சாலச் சிறந்த