பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

யும், அன்றைய ஆட்ட நிலையையும் கண்காணித்து அவர்கள் எடுப்பதற்கு சிரமமான பந்தாக இருந்தாலும் அல்லது தன்னால் அந்தப் பந்தை நன்றாக எடுத்தாடி அனுப்ப முடியும் என்றவாறு இருந்தாலும், அதை ஆடி விடுவதுதான் நல்லதாகும். தனது குழுவின் குறையை நிறைவு செய்து ஆடுவது இவரது தலையாய கடமையாகும். மிகமிக அத்யாவசியமாகும்.

5. தன் ஆடும் பகுதிக்கு வெளியே பந்து போகிறது என்றால் அதற்கான எச்சரிக்கைக் குரலை எழுப்புவதிலிருந்து (Caution), குறிப்பிட்ட பந்தை யார் யார் எடுத் தாட வேண்டுமென்று குறிப்பிட்டு சொல்வதுவரை, மைய ஆட்டக்காரர் அறிவித்து ஆடுவது நல்ல ஆட்ட முறையாகும். இவ்வாறு செய்வது குழப்பமான ஆட்ட நிலையில் இருந்து குழுவை மீட்டுத் தரும். குழு ஆட்டக்காரர்களுக்கும் ஒரு தைரிய உணர்வை ஊட்டிவிடும். எப்படி ஆடவேண்டும் என்பதையும் வழிகாட்டிவிடும்.

6. இவர் அடிக்கின்ற பந்தை அடித்தாடி தான் அனுப்பிட வேண்டும். எடுத்தாடி அனுப்ப வேண்டிய பந்தை, எடுத்தாடியே அனுப்ப வேண்டும். பிறர் பாராட்ட வேண்டும், பெரிய ஆட்டக்காரர் என்று புகழ வேண்டும் என்ற கற்பனை மனப்பான்மையில், வருகிற எல்லா பந்தையுமே அடித்தாடி அனுப்புவது தவறு. அனுப்ப முயல்வதும் தவறு.

அதேபோல, ஆடத் தொடங்குவதற்கு முன் பயந்து கொண்டு, ‘அடித்தால் பந்து போகுமோ போகாதோ’ என்று ஐயப்பட்டுக் கொண்டு, எல்ல பந்தையும் எடுத்து அனுப்பிக்கொண்டே இருப்பதும் தவறான ஆட்ட முறையாகும்.