பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனிப்பட்ட ஒவ்வொரு ஆட்டக்காரரின் ஆடும் முறையையும், அவர்கள் ஆடுகின்ற விதங்கள் பற்றியும் மேலே விவரித்திருந்தோம். இனி, ஒரு குழுவானது சிறந்த முறையில் ஆடுவதற்கு, அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும். எந்தெந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் கவனிப்போம்.

5. சிறந்த குழுவாக செயல்பட

1. ஒவ்வொரு ஆட்டக்காரரும் தன் ஆட்டத்தைப் பற்றியும் தன் திறமையைப் பற்றியும் தெரிந்து வைத்துக்கொண்டிருப்பதுபோலவே, தன் சக ஆட்டக்காரர்களான பாங்கர்களின் (Teammates) ஒவ்வொருவருடைய ஆட்டத் திறமையை பற்றியும், அவர்களது ஆட்டக் குறைபாடுகள் (Weakness) பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

2. ஒவ்வொருவருடைய குறைபாடுகளைத் தவிர்த்து ஆடுவது போன்ற வகையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பயிற்சி காலத்தில் Practice பழகும் பொழுதே பேசி, ஆடும் வகையைத் திருத்திக்கொண்டு ஆடிட வேண்டும்.

3. ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனது திறமையை மட்டும் அல்லாது, உரிமையையும், உயர்ந்த கடமையையும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

4. முதலில் தனது இடத்தை ஒழுங்காகக் காத்துக் கொண்டு ஆட வேண்டும். அதற்குப் பிறகே, தனது பாங்கர்களின் இடத்தைக் காத்து ஆடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல், தன் இடமும் காலியாகப்போய், பிறர் இடத்தைக் காக்கப் போய், அவர்,